ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மேலும் ஒரு வீரர் விலகல்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து லிசாத் வில்லியம்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதில் கார்பின் போஷ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Trending
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தென் அப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்த எஸ்ஏ20 லீக் தொடரின் போது காயத்தை சந்தித்த லிசாத் வில்லியம்ஸ் அதிலிருந்து தற்போது வரை மீளாத காரணத்தால் இத்தொடரில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் லிசாத் வில்லியம்ஸை அவரின் அடிப்படை தொகையான ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில் அவர் தொடரில் இருந்து விலகியதன் காரணமாக அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கார்பின் போஷ்க்கை அவரது அடிப்படை ஏலத்தொகையான ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் அங்கமான எம்ஐ கேப்டவுன் அணிக்காக கார்பின் போஷ் விளையாடியுள்ளார். மேற்கொண்டு இதுவரை 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கார்பின் போஷ் பேட்டிங்கில் இரண்டு அரைசதங்களுடன் 663 ரன்களையும், பந்துவீச்சில் 59 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேட்ச்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், அல்லா கசன்ஃபர், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், கார்பின் போஷ்*, விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.
Win Big, Make Your Cricket Tales Now