MI vs SRH, IPL 2025: வீரர்கள் படைக்க காத்திருக்கும் சாதனைகளின் பட்டியல்!
மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், வீரர்கள் படைக்கவுள்ள சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

IPL 2025 Mumbai Indians vs Sunrisers Hyderabad Stats Preview: ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறவுள்ள 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இவ்விரு அணிகளும் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு தற்போது வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடும் சில வீரர்கள் சிறப்பு சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்ப்போக்ம்.
Also Read
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா 86 ரன்கள் எடுத்தால், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். முன்னதாக ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் 221 இன்னிங்ஸ்களில் விளையாடி 6769 ரன்களுடன் இடம் இடத்தில் உள்ளார். அதேசமயம் ரோஹித் சர்மா இதுவரை 262 இன்னிங்ஸ்காள் விளையாடி அதில் 6684 ரன்களை அடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 14 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் தனது 1000 ரன்களை பூர்த்தி செய்வார். இதுவரை அவர் ஐபிஎல் தொடரில் 31 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள நிலையில் 36.52 என்ற சராசரியில் 986 ரன்களை எடுத்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்களும் அடங்கும்.
மேற்கொடுன் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். தற்போது, இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல், பியூஷ் சாவ்லா, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 234 டி20 இன்னிங்ஸ்களில் 296 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
நடப்பு சீசனில் இரு அணிகளின் செயல்திறன் இதுவரை சிறப்பானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மேற்கொண்டு இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் அதில் மும்பை 13 போட்டிகளிலும், ஹைதராபாத் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now