ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் முபை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தி இருந்தாலும், அணியின் கேப்டன் மற்றும் இளம் வீரருக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. அதன்படி நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக 20ஆவது ஓவரின் போதே ஒரு ஃபீல்டர் 30 யார்ட் வட்டத்திற்குள் வைத்து விளையாட வேண்டும் என்று அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு போட்டி கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதத்தைப் பெறும் மூன்றாவது கேப்டன் ரிஷப் பந்த் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது.