ஸ்லோ ஓவர் ரேட்: ரஜத் படிதார் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு அபராதம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் இரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியி டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷான் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 94 ரன்களையும், அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களையும் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் சிறு சிறு பங்களிப்பினை வழங்கினர். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் ரொமாரியோ ஷெஃபர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், விராட் கோலி 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக இந்த தவறை செய்துள்ளதன் காரணமாக அந்த அணி கேப்டன் ரஜத் படிதாருக்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு ஆர்சிபி அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த வீரர்கள், இம்பேக்ட் வீரர்கள் உள்பட அனைவருக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்பட்டாலும், தொடரின் முழு நேர கேப்டனாக ரஜத் படிதார் இருப்பதால் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் ஸ்லோ ஓவர் குற்றம் இது என்பதால் அந்த அணி கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ரிஷப் பந்த், குஜராத் டைட்டன்ஸின் ஷுப்மன் கில், ராஜஸ்தான் ராயல்ஸின் ரியான் பராக், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கும், மும்பை இந்தியன்ஸின் ஹர்திக் பாண்டியாவிற்கும், ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூருவின் ரஜத் படிதாருக்கும், டெல்லி கேப்பிட்டல்ஸின் அக்ஸர் பாடேல் அகியோருக்கும் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now