Advertisement

ஐபிஎல் 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; கேகேஆர் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
ஐபிஎல் 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; கேகேஆர் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; கேகேஆர் அணிக்கு 152 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 26, 2025 • 09:18 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 26, 2025 • 09:18 PM

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதானமாக தொடங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 33 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரியான் பராக் ஓரளவு தாக்குப்பிடித்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

Trending

இதில் அதிரடியாக தொடங்கிய ரியான் பராக் 3 சிக்ஸர்களுடன் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்த கையோடு தங்களின் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வநிந்து ஹசரங்கா 4 ரன்களிலும், நிதீஷ் ரானா 8 ரன்களிலும், ஷுபம் தூபே 9 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த துருவ் ஜூரெல் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், ஓரளவு ரன்களையும் சேர்த்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களைச் சேர்த்த கையோடு துருவ் ஜூரெலும், 7 ரன்களுடன் ஷிம்ரான் ஹெட்மையரும் விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடி இரண்டு சிக்ஸர்களை விளாசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 16 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement