
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இபோட்டியில் டாஸை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் - பிரியான்ஷ் ஆர்யா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரப்சிம்ரன் சிங் 5 ரன்களை மட்டுமே எட்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அறிமுக வீரர் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
இப்போட்டியில் அபாரமாக விளையாடி வந்த பிரியான்ஷ் ஆர்யா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் இப்போட்டியில் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல் ஒறையும் எட்டியுள்ளார்.