ஐபிஎல் 2025: ஜேக்கப் பெத்தலிற்கு பதிலாக டிம் செஃபெர்டை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேக்கப் பெத்தலிற்கு பதிலாக நியூசிலாந்தின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் டிம் செஃபெர்ட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் கடந்த மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொட்ங்கியது. ஒருபக்கம் ஐபிஎல் தொடரானது மீண்டும் தொடங்கினாலும் இதில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது பெரும் சிக்கலாம மாறிவுள்ளது.
ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் வீரர்கள் மே 26 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுதவிர்த்து இங்கிலாந்து அணியும் இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதனால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இடம்பிடிப்பது கேள்விக்குறியாகிவுள்ளது. அந்தவகையில் தற்போது ஆர்சிபி அணியில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தல் கடைசி லீக் போட்டியுடன் நாடு திரும்பவுள்ளார்.
இந்நிலையில் ஜேக்கப் பெத்தலிற்கு பதிலாக நியூசிலாந்தின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் டிம் செஃபெர்ட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த 2021 மற்றும் 22ஆம் ஆண்டுகளில் டிம் செஃபெர்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கேகேஆர் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி அதில் மொத்தமாக 26 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதன் காரணமாக அதன்பின் அவர் எந்தவொரு ஐபிஎல் அணியால் ஏலம் எடுக்கப்படவில்லை.
RCB have signed Tim Seifert as a replacement for Jacob Bethell! #RCB #IPL2025 #Cricket #Playoffs pic.twitter.com/XCpqq1NdDJ
— CRICKETNMORE (@cricketnmore) May 22, 2025இந்நிலையில் சமீபத்தில் அவர் டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். மேலும் அவர் நியூசிலாந்து அணிக்காக 66 டி20 போட்டிகளில் விளையாடி 10 அரைசதங்களுடன் 1540 ரன்களைச் சேர்த்துள்ளார். இந்நிலையில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக அந்த அணி லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸரபானியை ஒப்பந்தம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், டிம் செஃபெர்ட்*, மயங்க் அகர்வால், ஸ்வஸ்திக் சிகாரா, பிளெசிங் முஸரபனி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி
Win Big, Make Your Cricket Tales Now