
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் லீக் சுற்றின் முடிவில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் 28ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தாயாராகி வருகின்றனர். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவுசெய்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சமீபத்திய போட்டிகளில் சொதப்பியுள்ளதால், இப்போட்டியில் அந்த அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.