14 பந்துகளில் அரைசதம்; சாதனை படைத்த ரொமாரியோ ஷெஃபெர்ட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணி வீரர் ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.
இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், நூர் அஹ்மத், சாம் காரண் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ரோமாரியோ ஷெஃபெர்ட் சில சாதனைகளையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
அதன்படி இப்போட்டியில் ஷெஃபெர்ட் 14 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேக அரைசதமடித்த இரண்டாவது வீரர் எனும் பாட் கம்மின்ஸின் சாதனையை சமன்செய்ததுடன், ஆர்சிபி அணிக்காக அதிவேக அரைசதமடித்த வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக பாட் கம்மின்ஸ் 2018அம் ஆண்டு மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Romario Shepherd, What a knock!
Live #RCBvCSK Scores @ https://t.co/3HL7xFopok pic.twitter.com/BT3QdcCIq1— CRICKETNMORE (@cricketnmore) May 3, 2025அதேசமயம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளார். அவர் 2021ஆம் ஆண்டு 13 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. அதேசமயம் கடந்த 2013ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் 17 பந்துகளில் அரைசதம் கடந்ததே ஆர்சிபி அணி தரப்பில் ஒரு வீரர் அடித்த அதிவேக அரைசதமாக இருந்த நிலையில், ஷெஃபெர்ட் அதனை முறியடித்து அசத்தியுள்ளார்.
Are you not entertained?
— IndianPremierLeague (@IPL) May 3, 2025
Romario Shepherd thrilled the M. Chinnaswamy Stadium with a 'blink and you miss' knock
Updates https://t.co/I4Eij3ZNlN#TATAIPL | #RCBvCSK | @RCBTweets pic.twitter.com/uPDjTUpOvYசென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், தீபக் ஹூடா, எம்எஸ் தோனி(w/c), நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், மதீஷா பத்திரனா
இம்பேக்ட் வீரர்கள்: சிவம் துபே, ஆர் அஷ்வின், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேட்ச்), ஜிதேஷ் சர்மா(வ), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், லுங்கி என்கிடி, யாஷ் தயாள்
Also Read: LIVE Cricket Score
இம்பேக்ட் வீரர்கள்: சுயாஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரஷிக் தர் சலாம், மனோஜ் பன்டேஜ், ஸ்வப்நில் சிங்
Win Big, Make Your Cricket Tales Now