
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் போட்டிகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் ஏதெனும் ஒரு வீரர் காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில் தற்சமயாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியின் போது சந்தீப் சர்மா காயத்தை சந்தித்தார்.
இதனையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரின் காயம் குணமடைய சில காலம் தேவை என்று மருத்துவ குழுவினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தற்சமயம் சந்தீப் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகினார். இந்நிலையில் சந்தீப் சர்மாவுக்கான மாற்று வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.