
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியின் போது அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அவரது வலி தீவிரமடைந்தததை தொடர்ந்து மேற்கொண்டு அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக அந்த போட்டியில் ராஜச்தான் ராய்ஸ்ல் அணியானது சூப்பர் ஓவர் வரை சென்ற நிலையிலும் தோல்வியைச் சந்தித்தது.