
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதிலும் குறிப்பாக தங்களுடைய முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இம்முறை ஷுப்மன் கில் தலைமையில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மார்ச் 25ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பலபப்ரீட்சை நடத்தவுள்ளது. இதற்காக அந்த அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மான் கில், ஆட்டத்தின் வேகம், பேட்டிங் செய்யும் அணிக்கு 300 ரன்கள் என்பது சாத்தியம் என்ற நிலையை எட்டியுள்ளதாக கூறுகிறார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போதுள்ள டி20 கிரிக்கெட்டில் ஆட்டத்தின் வேகம், ஒரு போட்டியில் 300 ரன்கள் எடுக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு எட்டியுள்ளது.