எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாட விரும்புகிறோம் - ஷுப்மன் கில்!
சூழ்நிலைகளில் எப்படி ரன்கள் எடுக்க முடியும், ஆட்டத்தை எப்படி ஆழமாக எடுத்துச் செல்வது என்பது பற்றித்தான் நாங்கள் அதிகம் பேசுகிறோம் என்று குஜ்ராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரது அரைசதத்தின் மூலமும், ஜோஸ் பட்லரின் அபாரமான ஃபினிஷிங்கின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 90 ரன்களையு, சாய் சுதர்ஷன் 52 ரன்களையும், ஜோஸ் பட்லர் 42 ரன்களையும் சேர்த்தனர். கேகேஆர் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Also Read
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் அஜிங்கியா ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தியதுடன் 50 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோப்பிக்க தவறினர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்ததுடன் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில், “இந்த போட்டியில் வெற்றிபெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த இரண்டு போட்டிகளைப் பற்றியும் நாங்கள் பேசினோம் - அவர்கள்தான் எங்கள் தரவரிசையை முடிவு செய்வார்கள். இந்த இரண்டு வெற்றிகளையும் தொடர்ச்சியாகப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் விளையாடும் போதெல்லாம் எங்கள் சிறந்த ஆட்டத்தை விளையாட விரும்புகிறோம்.
இந்த மாதிரியான சூழ்நிலைகளில் எப்படி ரன்கள் எடுக்க முடியும், ஆட்டத்தை எப்படி ஆழமாக எடுத்துச் செல்வது என்பது பற்றித்தான் நாங்கள் அதிகம் பேசுகிறோம். ஆட்டத்தில் நாங்கள் முன்னிலையில் இருந்தோம், ஆனால் முன்னேறுவது ஒரு விஷயம், ஆட்டத்தை முடிப்பது வேறு விஷயம். இந்த வடிவத்தில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம். மேலும் அணியில் எப்போதும் சரி செய்ய வேண்டிய சில பகுதிகள் இருக்கும்.
Also Read: LIVE Cricket Score
இன்று நான் களத்தில் இருந்திருந்தல் நாங்கள் இன்னும் 10 ரன்கள் அதிகமாக எடுத்திருக்கலாம். பந்துவீச்சிலும் நாங்கள் சில தேவையற்ற தவறுகளைச் செய்துள்ளோம். ஆனால் முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்கள் சரியான ஆட்டத்தை விளையாடாவிட்டாலும், வெற்றி பெற ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும், அதன் காரணமாக நாங்கள் தற்சமயம் வெற்றியைப் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now