Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

Advertisement
ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 30, 2025 • 01:33 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 30, 2025 • 01:33 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 

Trending

ராஜஸ்தான் ராயல்ஸ்

ரியான் பராக் தலைமையில் முதலிரண்டு போட்டிகளை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது. அணியின் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், துருவ்  ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மையர் உள்ளிட்டோர் நம்பிக்கையளித்தாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதீஷ் ரானா உள்ளிட்டோர் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி வலுபெறும். 

மறுபக்கம் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷனா, வநிந்து ஹசரங்கா என இரண்டு உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களும் ரன்களைக் கட்டுபடுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சில் ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா உள்ளிட்டோரும் ரன்களைக் கொடுத்து வருவது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் விசயமாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மையர், ஷுபம் துபே, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.

சென்னை சூப்பர் கிங்ஸ்

மறுபக்கம் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் போட்டியை வென்ற சிஎஸ்கே அணி, அடுத்த போட்டியில் ஆர்சிபியிடம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அணியின் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தாலும், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா போன்ற வீரர்கள் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறுவதுடன் அணி மீதான அழுத்தத்தையும் அதிகரிகின்றனர். இதனால் இன்றைய போட்டியில் பேட்டிங் ஆர்டரில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்படி டெவான் கான்வே, விஜய் சங்கர் உள்ளிட்டோர் லெவனில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சை பொறுத்தமட்டில் நூர் அஹ்மத், மதீஷா பதிரானா, கலீல் அஹ்மத் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுடன் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் சோபிக்கும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ரச்சின் ரவீந்திர, ராகுல் திரிபாதி/டெவான் கான்வே, ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), தீபக் ஹூடா/விஜய் சங்கர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், மகேந்திர சிங் தோனி, நூர் அகமது, கலீல் அகமது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் – 29
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 16
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – 13

Also Read: Funding To Save Test Cricket

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (கேப்டன்), துருவ் ஜூரெல்
  • பேட்ஸ்மேன்கள் - ரச்சின் ரவீந்திரா, ரிதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், வனிந்து ஹசரங்கா, ரியான் பராக்
  • பந்து வீச்சாளர்கள் - நூர் அகமது (துணை கேப்டன்), மதிஷா பதிரானா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement