சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. தற்போதுவரை 6 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலிடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி இடத்திலும் உள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் விளையாடவுள்ள இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Trending
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பலமிக்க அணிகளில் ஒன்றென நீரூபித்துள்ளது. அதிலும் குறிப்பாக முதல் போட்டியிலேயே அந்த அணி அதிரடியில் மிரட்டியதுடன் 286 ரன்களைக் குவித்தும் சாதனை படைத்தது. அணியின் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், ஹென்ரிச் கிளாசென், நிதீஷ் ரெட்டி என சிக்ஸர் மன்னர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.
அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் கேப்டன் பாட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷல் படேல் ஆகியோர் சன்ரைசர்ஸ் அணிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுடன் சிமர்ஜித் சிங், ஆடம் ஸாம்பா உள்ளிட்டோரும் அணிக்கு வழு சேர்க்கின்றனர். இருப்பினும் அந்த அணியின் பந்துவீச்சு தக்குதல் ரன்களைக் கட்டுப்படுத்த தவறுவது பெரும் பின்னடவாக பார்க்கப்பவது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சிமர்ஜித் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது சீசன் முதல் போட்டியிலேயே இறுதிவரை போராடிய நிலையிலும் தோல்வியைத் தழுவியது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்று இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்பில் உள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான ஃபர்மில் உள்ளனர்.
அவர்கலுடன் ரிஷப் பந்த், ஐடன் மார்க்ரம், ஆயூஷ் பதோனி ஆகியோரும் சோபிக்கும் பட்சத்தில் அது அணிக்கு கைகொடுக்கும். அதேசமயம், பந்துவீச்சை பொறுத்தவரையில் மிகப்பெரும் பலவீனமாக உள்ளது. சர்துல் தாகூர், அவேஷ் கான், ரவி பிஷ்னாய் உள்ளிட்டோர் மட்டுமே அந்த அணியில் பந்துவீச்சை துறையை வழிநடத்துவதால் இப்போட்டியை அந்த அணி எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 04
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 03
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 01
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷான்
- பேட்ஸ்மேன்கள் - மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், டிராவிஸ் ஹெட் (கேப்டன்)
- ஆல்-ரவுண்டர்கள் - அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி
- பந்து வீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த்
Win Big, Make Your Cricket Tales Now