
IPL Auction 2022: 10 Big Names That Went Unsold (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடந்தன. இந்த சீசனில் லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைந்துள்ளன. மொத்தம் 10 அணிகளும் சேர்ந்து மொத்தமாக 551.7 கோடி கொடுத்து 204 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர்.
அதிகபட்சமாக இஷான் கிஷானை ரூ.15.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. தீபக் சாஹருக்கு ரூ.14 கோடி கொடுத்தது சிஎஸ்கே. ஸ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் அணி ரூ.12.25 கோடிக்கு எடுத்தது.
வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் இவர்தான். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடி என்ற 2ஆவது அதிகபட்ச தொகைக்கு விலைபோனார்.