
நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் வழக்கம் போல் ஆர்சிபி சொதப்புவிட்டதாக அந்த அணியை ரசிகர்கள் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறார்கள். ஏலத்திற்கு முன்பு தங்களிடம் இருந்த முன்னணி பவுலர்களை விடுவித்த ஆர் சி பி அணி இந்த ஏலத்தில் வெஸ்ட் இண்டிஸின் அல்ஸாரி ஜோஸப்பிற்கு 11 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது.
அதேபோன்று நியூசிலாந்து வீரர் லோக்கி ஃபர்குசனுக்கு இரண்டு கோடியும், டாம் கரனுக்கு ஒன்றரை கோடி ரூபாயும் ஆர்சிபி அணி கொடுத்திருக்கிறது. இதேபோன்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாளுக்கு 5 கோடி ரூபாய் ஆர்சிபி அணி கொடுத்திருக்கிறது. இந்த பவுலர்களை வைத்து சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி அடி வாங்க போகிறது என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் வியூகம் குறித்து பேசி உள்ள அந்த அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “கடந்த சீசனின் போது நாங்கள் உள்ளூர் போட்டியில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம். ஏனெனில் கடந்த சீசனில் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே நாங்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றோம் தற்போது சொந்த மண்ணில் விளையாடி வெற்றி பெற வேண்டும்.