
IPL: CSK to start training at ICC Academy on Thursday, MI to train at Sheikh Zayed Stadium from Frid (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்று, 6 நாள் தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி தனிமைப்படுத்துதல் காலத்தை முடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் ஐசிசி கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் தங்கள் பயிற்சிகளைத் தொடங்கவுள்ளன.