
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதில் கேகேஆர் அணி வெல்லும் மூன்றாவது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடப்பு சீசன் முடிவடைந்துள்ள நிலையி, அடுத்த ஐபிஎல் தொடருக்கான விவாதத்தில் ரசிகர்கள் இறங்கியுள்ளனர். ஏனெனில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் மற்றும் அணிகளின் விருப்பங்கள் குறித்த தகவல் இன்று வெளியாறியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் தொடரின் மேகா ஏலமானது வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளன. அதேசமயம், இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ஏலத்தொகையாக ரூ.120 கோடி ஒதுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.