
ஐபிஎல் டி20 பயோ-பபுள் சூழலுக்குள் கரோனா வைரஸ் புகுந்ததால், டி20 தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதையடுத்து, வெளிநாட்டு வீரர்களைப் பாதுகாப்பாக தாயகம் அனுப்பிவைக்கத் தேவையான வழிகளை ஆராய்வோம் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்தார்.
ஐபிஎல் டி20 தொடரில் பயோ-பபுள் சூழலில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் நாளை நடக்க இருந்த சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.