
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதன்படி இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ஐபிஎல் தொடர் அனைத்து வீரர்களுக்குள் இருக்கும் வெற்றி பெறும் மனப்பான்மைய அதிகரித்துள்ளது. மேலும் இத்தொடரின் மூலம் கிடைக்கும் பணத்தின் வருகை மற்றும் பல அணிகள் பெறும் நிதி ஆகியவற்றில் பெரும்பகுதி இந்திய கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பில் மீண்டும் செலவிடப்பட்டுள்ளது.