இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியதுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளையும் கடந்து அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி தரப்பில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் எனும் சாதனையை படைத்தார்.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்ட்ல் 100 போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனைகளை படத்ததற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆகியோர் கலந்துகொண்டுனர்.