
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கிய்ள்ளன. மேற்கொண்டு எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் எத்தனை வீரர்கல் தக்கவைக்கலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பான ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது பல்வேறு விசயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், வெளிநாட்டு வீரர்கள் சிலர் அணியில் ஒப்பந்தமான நிலையில் தவறான காரணங்களை கூறி தொடரில் இருந்து விலகுவதை வாடிக்கையாக வைத்துள்ளது குறித்து பிரதானமாக பேசப்பட்டது.
இதில் பல உரிமையாளர்கள் இந்த பிரச்சனை குறித்து தங்கள் கருத்தை தெரிவித்தனர், இந்த கூட்டத்திற்கு பிறகு பிசிசிஐ இந்த விஷயத்தில் கடுமையான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் மற்றும் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா போன்ற முக்கிய வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்ட போது, அவர்கள் பின்னர் தொடரிலிருந்து விலகினர்.