
IPL Mega Auction - Accelerated List Players Sold (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இந்நிலையில் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று இரண்டாம் கட்ட வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் தற்போது ஆக்ஸிலரேட்டர் முறையில் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 57 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.
இதில் அதிகபட்சமாக டிம் டேவிட்டை 8.25 கோடிக்கும், ஜோஃப்ரா ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.