ஐபிஎல் 2024: மொத்தம் 1,574 பேர் பங்கேற்கும் வீரர்கள் ஏலம் நவ.24ல் தொடக்கம்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலமானது வரும் நவம்பர் 24-25ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என பிசிசிஐ கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்,கேகேஆர் உள்ளிட்ட அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பஞ்சா கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.
Trending
இதுதவிர்த்து, இந்த ஏலத்தில் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது 110.5 கோடியுடனும், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ரூ.41 கோடியுடனும் பங்கேற்க இருக்கின்றன. மேலும் ஆர்சிபி அணி 83 கோடியுடனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 73 கோடியுடனும், லக்னோ, குஜராத் அணிகள் தலா 69 கோடியுடனும், கேகேஆர் அணியானது 51 கோடியுடனும், மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 45 கோடியுடனும் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் வீரர்களுக்கான மெகா ஏலம் எங்கு எப்போது நடைபெறும் என்பது குறித்தும், இதில் எத்தனை வீரர்கள் பங்கேற்கிறார்கள் என்பது குறித்து ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலமானது வரும் நவம்பர் 24-25ஆம் தேதிகளில் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இம்முறை வீரர்கள் ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 1,165 வீரர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 409 வீரர்களும் பங்கேற்கின்றனர். இதில் வெளிநாடுகளில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 91 வீரர்களும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 76 வீரர்களும் பங்கேற்கவுள்ள நிலையில், குறைந்த பட்சமாக ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலியைச் சேர்ந்த ஒரு வீரர் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்த பட்டியலில் 320 சர்வதேச வீரர்களும், 1,224 ஆன்கேப்ட் வீரர்களும், 30 அசோஷியட் தேசத்தை சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 48 சர்வதேச வீரர்களும், 272 வெளிநாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். இதுதவிர்த்து 965 இந்திய அன்கேப்ட் வீரர்களும், 104 வெளிநாடுகளைச் சேர்ந்த அன்கேப்ட் வீரர்களும் பங்கேற்கின்றன. அதேசமயம் கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடிய 155 வீரர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இதிலிருந்து ஒவ்வொரு அணியும் தலா 24 பேட் அடங்கிய அணியை இருவக்க வேண்டும். இதன்மூலம் எதிவரும் ஐபிஎல் தொடர் வீரர்கள் ஏலத்தின் மூலம் 204 வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யவுள்ளன. இதனால் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்யும், இந்த ஏலத்தில் எந்த வீரர் அதிக தொகைக்கு ஏலம் செல்வார், இதில் எத்தனை இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now