
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் துவங்கி மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.
இதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
உலகக் கோப்பை உள்ளிட்ட இதர தொடர்களை காட்டிலும் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பேட்ஸ்மேன்கள் அதிகப்படியான பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களுக்கு த்ரில் விருந்து மழை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசிய டாப் 5 வீரர்களை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.