ஐபிஎல் 2021: ‘கேகேஆர் தான் அப்படினா, எஸ்.ஆர்.எச். அவங்களையே மிஞ்சுடுவாங்க போலயே’ பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்ச
ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணி தரப்பில் கேப்டன் விராட் கோலி 33 ரன்களையும், நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் 59 ரன்களையும் சேர்த்தனர். ஆனால் அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
Trending
இதனால் இன்னிங்ஸ் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணி தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் அரைசதம் கடந்து உதவினார். பின் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வார்னர் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மனீஷ் பாண்டேவும் 34 ரன்களில் நடையைக் கட்டினார்.
பின்னர் வந்த பேர்ஸ்டோவ் 12, அப்துல் சமத் ரன் ஏதுமின்றியும் சபாஷ் அஹ்மத் பந்துவீச்சில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு அணி பின்னர் களமிறங்கிய வீரர்களை நிலைக்க விடாமால் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 143 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
பெங்களூரு அணி தரப்பில் சபாஷ் அஹ்மத் 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியிலும் கேகேஆர் அணியின் பினீஷர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மும்பை அணியிடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now