
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், மீதமுள்ள இரு இடங்களுக்கான போட்டி கடுமையாகியுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா பஞ்சாப் கிங்ஸ் அணிகாக விளையாடினார்.
தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த காகிசோ ரபாடா, அதன்பின் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்டார். இந்நிலையில் தனது காயத்தின் தன்மை தீவிரமடைந்துள்ள நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து காகிசோ ரபாடா விலகியுள்ளது உறுதியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடிய காகிசோ ரபாடா 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நாடு திரும்பியுள்ள ரபாடா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் மூலம் சிகிச்சைப் பெற்று வருகிறார். அதேசமயம் ரபாடாவின் காயம் குறித்து மருத்து குழு மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.