
அயலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Ireland vs South Africa 1st T20I, Dream11 Prediction: சமீபத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி அடுத்ததாக அயர்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது அபுதாபியில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பிறகு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Ireland vs South Africa 1st T20I, Dream11 Prediction:
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
- நேரம் - செப்டம்பர் 27, இரவு 9 மணி (இந்திய நேரப்படி)