
ஜிம்பாப்வே அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணியானது 4-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து ஜிம்பாப்வே அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறை என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ‘அந்தவகையில் வரும் ஜூலை 25ஆம் தேதி பெல்ஃபெஸ்டில் நடைபெறும் இப்போட்டியானது ஜூலை 29ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான அயர்லாந்து அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அயர்லாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆண்ட்ரூ பால்பிர்னி நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு பால் ஸ்டிர்லிங், மார்க் அதில், கர்டிஸ் கேம்பர், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரேக் யங் என நட்சத்திர வீரகளும் அயர்லாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.