
Ireland win the fourth match by 64 runs and take an unassailable 3-1 lead in the T20I series (Image Source: Google)
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று டப்லினில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி கெவின் ஓ பிரையன், பால் ஸ்டிர்லிங், பால்பிர்னி ஆகியோரது அதிரடி ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கெவின் ஓ பிரையன் 47 ரன்களையும், பால் ஸ்டிர்லிங் 39 ரன்களையும் சேர்த்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் மஸகட்ஸா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.