Advertisement

மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.

Advertisement
மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!
மான்செஸ்டர் டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 22, 2025 • 12:03 PM

ENG vs IND, 4th Test: மான்செஸ்டரில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 22, 2025 • 12:03 PM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும், இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. மேற்கொண்டு இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். அதிலும் குறிப்பாக அவர் தனது அணியில் கருண் நாயர், நிதிஷ் ரெட்டி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்ஷன், துருவ் ஜுரெல் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். இதில் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியும், ஆகாஷ் தீப் காயத்தால் அவதிப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், “இப்போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன் மூன்றாவது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்தியா வேறு ஏதாவது யோசித்து கருண் நாயரை விளையாட வைக்கலாம், ஆனால் மூன்றாம் இடத்தில் ஒரு இடதுகை வீரர் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதேசமயம் நிதிஷ் குமார் ரெட்டி அணியில் இல்லாத நிலையில் துருவ் ஜூரலை தேர்வு செய்யலாம்.

ஏனெனில் ரிஷப் பந்த் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராக செயல்பட முடியும். மேலும் பேட்டிங்கிலும் அவரால் ரன்கள் எடுக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் ஆகஷ் தீப்பும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், அவரது இடத்தில் பிரஷித் கிருஷ்ணா விளையாட அதிக வாய்ப்புள்ளதாகவும், அதனால் அவரை தேர்வு செய்துள்ளேன்” என்றும் அவர் கூறியுள்ளார். 

இருப்பினும் அவர் தனது அணியில் குல்தீப் யாதவ், அபிமன்யூ ஈஸ்வரன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. முன்னதாக நடந்து முடிந்த முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் இவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். இதனால் இந்த போட்டியிலாவது அவர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இர்ஃபான் பதன் அவர்களைப் புறக்கணித்துள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: LIVE Cricket Score

இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்திய அணி பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மான் கில், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement