
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே எப்போதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மோதலாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான் பார்க்கப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துவிட்டன. அந்தளவிற்கு இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.