ஆஸ்திரேலியா vs இந்தியா முதல் டி20: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 3 போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை கான்பெர்ராவில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், தனது பிளேயிங் லெவனை கணித்துள்ளார். இதுகுறித்த காணொளியானது வைரலாகியும் வருகிறது.