இன்ஹேலரை பயன்படுத்திய பென் ஸ்டோக்ஸ்; காரணம் இதுதான்!
பயிற்சியின் போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் இன்ஹேலரை பயன்படுத்திய புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடை சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளிடம் தோல்வியடைந்தது பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதிலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் கம்பேக் கொடுத்தும் அந்த அணியை காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலையில் இன்று நடக்கவுள்ள போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அதேபோல் பென் ஸ்டோக்ஸும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
Trending
இந்த நிலையில் பயிற்சியின் போது பென் ஸ்டோக்ஸ், ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் பயன்படுத்தும் இன்ஹேலரை பயன்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் வெளியாகிய நிலையில், பென் ஸ்டோக்ஸ்-க்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் ரசிகரக்ளிடையே எழுந்துள்ளது.
ஆனால் விளையாட்டு வீரர்கள் பலருக்கும் பயிற்சிக்கு முன் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படும். அதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் இன்ஹேலரை பயன்படுத்துவார்கள். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் கால் மற்றும் இடுப்பில் காயமடைந்து அவதிபட்டு வருகிறார். இதனால் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஸ்டெராய்டுகளை உடலில் செலுத்தும் கருவியாகவும் இன்ஹேலர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் பெங்களூரு மைதானத்தில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் மருத்துவர்களின் ஆலோசனையின் படியே பென் ஸ்டோக்ஸ் இன்ஹேலர் பயன்படுத்தியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தகவல்படி, எந்த வீரருக்கும் ஆஸ்துமா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now