
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி கராச்சில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் போறுப்பிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியதை அடுத்து புதிய கேப்டனாக அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
மேலும் இந்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் 4 ஆண்டுகளுக்கு பின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் கிளென் பிலீப்ஸுக்கு ஓராண்டுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. மேலும் பிளர் டிக்னர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.