
2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய அணிகளின் வீரர்கள் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு விராட் கோலி, முகமது சிராஜ், அஸ்வின், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் 2ஆவது குழுவினர் இங்கிலாந்துக்கு சென்று சேர்ந்துள்ளனர். ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், பலரின் கவனமும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பக்கம் திரும்பியுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸி. அணி வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஓவல் மைதானம், ஆஸ்திரேலியா சூழலை போலவே அமைந்திருக்கும். இதனால் ஆஸி. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நன்றாக எடுபடும். ஆனால் ஆஸி. வீரர்களின் மூளைக்குள் புஜாரா இப்போதும் பாதிப்பை உண்டு செய்கிறார்.