துலீப் கோப்பைக்கான அணியிலிருந்து விலகிய இஷான் கிஷான்!
துலீப் கோப்பைகாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியிலிருந்து தன்னுடைய பெயரை நீக்கும்படி இந்திய வீரர் இஷான் கிஷான் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரபலமாக இருக்கும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் புவியியல் அமைப்பு அடிப்படையில் கிழக்கு, மேற்கு, வடக்கு, மத்திய என ஆறு அணிகளுக்கு இடையே நடத்தப்படுகிறது. இத்தொடர் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் ஃபோட்டி பார்மட்டில் நடத்தப்பட்டு வருகிறது. முன்னணி இந்திய வீரர்கள் பலர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இல்லாத சமயங்களில் துலீப் கோப்பை, ரஞ்சிக் கோப்பை போன்ற கடும்போட்டி நிறைந்த உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பது வழக்கம்.
இந்த வருட தெற்கு ஜோன் அணியில் ஐபிஎல் போட்டிகளில் அசத்திய திலக் வர்மா, சாய் கிஷோர், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்கள் கொண்ட பட்டாளம் இருக்கிறது. அதேபோல் கிழக்கு ஜோன் அணியில் சில இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியை இந்தியா ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் வழி நடத்துகிறார். சபாஷ் நதீம் துணைகேப்டனாக இருக்கிறார். இந்த கிழக்கு ஜோன் அணிக்காக தான் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
Trending
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால் பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அடுத்ததாக வருகிற ஜூலை மாதம் இரண்டாம் வாரம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
ஏற்கனவே டி20, ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய இடத்தை பிடித்துவிட்டார் இஷான் கிஷன். டெஸ்ட் போட்டிகளில் உள்ளே வெளியே என மாறிமாறி இடம்பெற்று வருகிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பிடிக்கும் நோக்கில் இருக்கும் இஷான் கிஷன், அதற்கென்று தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்.
இதன் காரணமாக துலீப் கோப்பை தொடரிலிருந்து தன்னுடைய பெயரை நீக்கி விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கு கவனம் செலுத்த உள்ளதாக காரணத்தை தெரிவித்துள்ளார். இஷான் கிஷன் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கிழக்கு மண்டல அதிகாரிகள், இஷன் கிஷனுக்கு பதிலாக மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அபிஷேக் போரல் பெயரை அணியில் இணைத்துள்ளனர்.
இவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக இந்த வருட ஐபிஎல் சீசனில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரை ஒருமாதம் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முழுவதுமாக இசான் கிஷான் இருப்பார் என்பதால் தன்னுடைய பெயரை திரும்ப பெற்றிருக்கலாம் என்றும் ஒரு தரப்பு கூறி வருகிறது. இருப்பினும் தன்னுடைய பெயரை வாபஸ் வாங்குவது சரியான முடிவல்ல. இளம் வயதில் இப்படி செய்வது ஏற்புடையது அல்ல என்கிற கோணத்தில் ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now