
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள மணிப்பூர் - ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கர்ணஜித் யும்னம் - பசீர் ரஹ்மான் உள்ளிட்டோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 24 ரன்களை எடுத்திருந்த நிலையில் கர்ணஜித் யும்னம் விக்கெட்டி இழக்க, அவரைத்தொடர்ந்து பசீம் ரஹ்மான் 26 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த பிரயோஜித் சிங் மற்றும் ஜான்சன சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான்சன் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரயோஜித் சிங் 43 ரன்னில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆனந்த் 8 ரன்னிலும், 69 ரன்கள் எடுத்திருந்த ஜான்சன் சிங்கும் விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபைரோய்ஜாம் ஜோதின் 35 ரன்களைச் சேர்த்தார்.