
இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட நட்சத்திர வீரர் இஷான் கிஷான் கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக கடுமையாக போராடி வருகிறார். இதன் காரணமாக 26 வயதான இஷான் கிஷான் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான புஜ்ஜி பாபு தொடரில் ஜார்கண்ட் அணிகாக விளையாடிவருகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பந்துவீசிய ஜார்கண்ட் அணியானது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணி பேட்டர்களை தடுமாறவைத்தனர். இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் மத்திய பிரதேச அணியானது 225 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷ்வாஹா 84 ரன்களயும், அர்ஹாம் அகில் 57 ரன்களையும் சேர்த்தனர்.
ஜார்கண்ட் அணி தரப்பில் விவேகனந்த் திவாரி மற்றும் ஆதித்யா சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இப்போட்டியில் ஜார்கண்ட் அணி கேப்டன் இஷான் கிஷன் தனது விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். அதிலும் அவர் ஸ்டம்புகளுக்குப் பின்னால் விக்கெட் கீப்பிங் செய்து ரசிகர்களை மீண்டும் மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.