
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதல்முறையாக நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி உலகக்கோப்பை வெள்ளை காரணமாக இருந்தவர். 2007 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் எம்எஸ் தோனி. அனைத்து வீரர்களையும் அனுசரித்து செல்வதிலிருந்து பதட்டமான சூழ்நிலையிலும் கூலாக இருந்து அணியை வழி நடத்தியதால் கேப்டன் கூல் என ரசிகர்களாலும் கிரிக்கெட் விமர்சகர்களாலும் அழைக்கப்பட்டவர்.
இன்று இந்திய அணியின் தூணாக விளங்கும் விராட் கோலி,ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்களை வழி நடத்தி வலுவான இந்திய அணி உருவாக காரணமாக இருந்தவர். எல்லா வீரர்களையும் அரவணைத்துச் செல்லும் தோனி வீரர்களில் சிலர் போட்டிகளின் போது தவறு செய்தால் அவர்களை தட்டிக் கொடுத்து தவறை சுட்டிக்காட்டுபவர்.
இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா தோணியுடனான தனது அனுபவம் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு இறுதி மூன்று ஓவர்களில் 40 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இஷாந்த் சர்மா வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என முப்பது ரன்களை விலாசினார் ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஃபால்க்னெர்.