Advertisement

ஆண்டர்சனை வீட ஜாகீர் கான் தான் சிறந்தவர் - இஷாந்த சர்மா!

ஆண்டர்சனை விட பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களிலும் ஸ்விங் செய்யும் ஜஹீர் கான் தான் என்னைப் பொறுத்த வரை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 26, 2023 • 12:39 PM
Ishant Sharma said,
Ishant Sharma said, "Zaheer Khan was better than Jimmy Anderson"! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 விக்கெட் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார்.

இந்நிலையில் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலையில் மிரட்டும் ஆண்டர்சனை விட பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களிலும் ஸ்விங் செய்யும் ஜஹீர் கான் என்னைப் பொறுத்த வரை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.

Trending


இது குறித்து பேசிய அவர், “ஆண்டர்சன் பவுலிங் ஸ்டைல் மற்றும் முறை ஆகியன முற்றிலும் மாறுபட்டது. அவர் இங்கிலாந்தில் வித்தியாசமான சூழ்நிலையில் விளையாடினார். ஒருவேளை இந்தியாவில் அவர் விளையாடியிருந்தால் இந்தளவுக்கு வெற்றிகரமாக இருந்திருக்க முடியாது. எனவே அவரை விட ஜாகிர் கான் சிறந்தவர். மேலும் 2014 வெலிங்டன் போட்டியில் கேட்ச் விட்டதற்காக தம்முடைய குருவான ஜாகீர் கானை அனைவரும் நினைப்பது போல் திட்டவில்லை.

அன்றைய நாளில் என்னை நானே திட்டிக் கொண்டேன். மாறாக கேட்ச் விட்டதற்காக யாரையும் திட்டவில்லை. அந்த நிலையில் என்னுடைய குருவான அவரை நான் திட்டுவேனா? அப்படி நான் கனவில் கூட நினைத்ததில்லை. இருப்பினும் அந்த போட்டியில் மெக்கல்லம் பெரிய ரன்களை அடித்ததால் நான் கடுப்பானேன். ஜஹீர், ஷமி மற்றும் நான் ஃபிளாட்டான பிட்ச்சை கொண்ட அந்தப் போட்டியில் ஒவ்வொரு 4 ஓவருக்கு ஒருமுறை மாற்றி மாற்றி வீசியது விரக்தியை ஏற்படுத்தியது” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement