Advertisement
Advertisement
Advertisement

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட தவறிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!

சீசன் முழுவது நல்ல தரமான கிரிக்கெட்டை விளையாடாததால் எங்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறமுடியவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Advertisement
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட தவறிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட தவறிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 18, 2024 • 12:58 PM

மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார், 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 18, 2024 • 12:58 PM

அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 28 ரன்களிலும், தீபக் ஹூடா 11 ரன்களிலும் விக்கெடை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர். 

Trending

அதன்பின் 75 ரன்களில் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை இழக்க, 55 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுலும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 22 ரன்களையும், குர்னால் பாண்டியா 12 ரன்களையும் சேர்க்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. மும்பை தரப்பில் நுவான் துஷாரா, பியூஷ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - டெவால்ட் பிரீவிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவால்ட் ப்ரீவிஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த ரோஹித் சர்மாவும் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, நெஹால் வதேரா ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - நமன் தீர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நமன் தீர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களைச் சேர்த்த நிலையிலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்த தோல்வி மிகவும் கடினமான ஒன்று. சீசன் முழுவது நல்ல தரமான கிரிக்கெட்டை விளையாடாததால் எங்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறமுடியவில்லை. இது ஒரு தொழில்முறை உலகம். எப்போதும் வெளியே வந்து நமது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னோக்கி செல்ல வேண்டும். 

ஆனால் எங்களால் ஒரு குழுவாக தரமான கிரிக்கெட்டை விளையாடமுடியவில்லை. எங்கு தவறு நடந்தது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு இது சரியான நேரம் அல்ல. ஏனெனில் எங்களது முழு சீசனும் தவறாக அமைந்துள்ளது. மற்ற போட்டிகளைப் போல் இந்த போட்டியையை கடந்தசெல்வது கடினமான ஒன்று” என தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement