
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொண்டுள்ள பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்தாண்டு இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், “சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போதுமே அதிகம் பேசப்படும் ஒரு போட்டியாக உள்ளது. உலகில் எங்கு சென்றாலும் இந்த போட்டி குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகிறது. அதனால் வீரர்களும் இப்போட்டியில் விளையாடுவதற்காக உற்சாகமாக உள்ளனர். என்ன நடக்கும் என்றால் எல்லோரும் அவரவர் நாட்டை ஆதரிப்பதால் இந்த போட்டியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.