
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி இந்திய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாக ரோஹித்தை அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்துள்ளது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது கேப்டன் பதவியை துறந்த விராட் கோலி தற்போது 50 ஓவர் கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் ரன் குவிக்க தடுமாறி வருவதாலும், அணியில் அவரது ஆதிக்கம் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலிக்கு தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்தும் விலக அழுத்தம் அதிகரித்து வந்த நிலையில் விராட் கோலி அதிரடியாக ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.