ஐபிஎல் 2021: தொடரிலிருந்து வெளியேறினாலும், ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கும் - ரோஹித் சர்மா!
மும்பை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறினாலும் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு இருக்கும் என அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் மிக முக்கிய போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ஆனால் ப்ளே ஆஃப் செல்ல முடியவில்லை.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களல் 235/9 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்களும் குவித்தனர்.
Trending
அதன்பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 65 ரன்களுக்குள் சுருட்டினால் மட்டுமே மும்பை ப்ளே ஆஃப் செல்லும் என்ற இக்கட்டான சூழல் இருந்தது.
ஆனால், மும்பை பவர் பிளேவிலேயே 70 ரன்கள் அடிக்கவிட்டு, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இறுதியில் ஹாதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 193/8 ரன்கள் சேர்த்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 69 (41) ரன்களும், ஜேசன் ராய் 34 (21) ரன்களும் சேர்த்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா “மும்பை போன்ற பெரிய அணிக்காக விளையாடும்போது, சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இதனை நான் அழுத்தம் எனக் கூற மாட்டேன். அதற்கும் மேலானது. முக்கியமான போட்டிகளுகாக சில சீனியர் வீரர்களை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது உண்மையில் சங்கடமான விஷயம்தான். இருப்பினும், வெற்றிபெற்ற அணியை மாற்ற முடியாது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்த சீசனில் வெற்றி, தோல்வி மாறிமாறி வந்தது. ஆனால் அனைவருமே அணிக்காக சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம். டெல்லியில் விளையாடியபோது வெற்றி பயணத்திற்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அதன்பிறகு நீண்ட இடைவேளை இருந்ததால், அது உதவிக்கரமாக இல்லை. இன்று நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ரன் மழை நிச்சயம் ரசிகர்களுக்கு இது விருந்தாக இருந்திருக்கும். ரசிகர்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு இருக்கும்” எனத் தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now