
It was a shame Delhi Capitals couldn’t get into the IPL 2022 playoffs: Mitchell Marsh (Image Source: Google)
15ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அந்த அணி 14 புள்ளிகள் எடுத்து 5ஆவது இடத்தை பிடித்தது.
மும்பை அணிக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த ஆட்டத்தில் தோற்று டெல்லி வெளியேறியது.
இந்த நிலையில் டெல்லி தகுதி பெறாதது குறித்து அந்த அணியில் விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.