
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி பவர் பிளேவில் 37 ரன்கள் எடுத்து, 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 79 ரன்கள் எடுத்து, 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு முதல் விக்கட்டுக்கு 11.3 ஓவரில் 87 ரன்கள் கிடைத்தது. ஆனால் பத்து ஓவர்களுக்குப் பிறகு சரியாக விளையாடாமல் கடைசி ஐந்து ஓவர்களுக்கு 50 ரன்கள் தேவை என்று நிலைமையைக் கொண்டு வந்து, இறுதி ஓவருக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 8 ரன்கள் மட்டுமே அடித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
பேட்டிங்கில் முக்கியமான கட்டத்தில் களமிறங்கி 16 பந்துகளில் 21 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் ஆகிய இரண்டு முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றிய மார்கஸ் ஸ்டாய்னிஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.