
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொட்டதெல்லாம் சிக்ஸர் என்ற வகையில் அசுர பலத்தில் பயணித்து வருகிறது. முதல் 2 போட்டிகளிலுமே அபார வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றியும், நெதர்லாந்து போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் வகித்து வருகிறது.
இந்திய அணியின் இந்த அபார வெற்றிகளுக்கு முக்கிய தூணாக இருந்துள்ளவர் விராட் கோலி தான். 2 ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள அவர், பாகிஸ்தான் போட்டியில் டாப் ஆர்டர் சரிந்த போது ஒன்றை ஆளாக போராடி 53 பந்துகளில் 83 ரன்கள் அடித்து உதவினார். குறிப்பாக ஹாரிஸ் ராஃப் வீசிய ஓவரில் அவர் அடித்த ஸ்ட்ரைக் சிக்ஸர் ரசிகர்களை இன்று வரை வியப்பிலேயே வைத்துள்ளது. இதே போல நெதர்லாந்து போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.
இந்நிலையில் கோலியின் இந்த இன்னிங்ஸ் குறித்து பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னி புகழ்ந்து பேசியுள்ளார். அதில், "இதுபோன்ற போட்டியை காண வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. கோலி அந்த பந்தை சிக்ஸர் அடித்த விதம் இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாதகமாக சென்று, கடைசி நேரத்தில் இந்தியாவின் பக்கம் வெற்றி வருவதை அடிக்கடி நம்மால் காண முடியாது.