ஷாகிப் மீதிருந்த மரியாதை போய்விட்டது - ஏஞ்சலோ மேத்யூஸ் சாடல்!
வங்கதேசம் இப்படி ஒரு மோசமான வேலையை செய்யுமென எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கும் மேத்தியூஸ், ஷாகிப் மீதிருந்த மரியாதை போய்விட்டதாக விமர்சித்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஆனால் அதை விட அந்த போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது அந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வந்த மேத்யூஸ் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக ஹெல்மெட் பழுதாக இருந்ததை பார்த்தார்.
அதனால் தன்னுடைய அணியிடமிருந்து புதிய ஹெல்மட்டை வாங்கிய அவர் வேண்டுமென்ற நேரத்தை தாமதம் செய்வதாக புகார் செய்த வங்கதேச அணியினர் நடுவரிடம் அவுட் கொடுக்குமாறு கேட்டனர். அதை பரிசீலித்த நடுவர்கள் மேத்யூஸ் அவுட்டென அறிவித்தது அனைவரையும் ஆழ்த்தியது. இருப்பினும் பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அடுத்த பந்தை எதிர்கொள்வதற்கு 2 நிமிடத்திற்குள் வர வேண்டிய மேத்யூஸ் தாமதமாக வந்ததால் 143 வருட கிரிக்கெட்டில் கால தாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாப சாதனை படைத்தார்.
Trending
மறுபுறம் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்று மேத்யூஸ் நிலைமையை எடுத்து சொன்ன பின்பும் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியினர் கொஞ்சமும் செவி சாய்க்காமல் இந்த மனசாட்சியற்ற செயலில் ஈடுபட்டது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ஷாகிப்பை அவுட்டாக்கிய போது நேரம் முடிந்து விட்டது வெளியே செல்லுங்கள் என்ற வகையில் மேத்தியூஸ் பதிலடி கொடுத்தார்.
இறுதியில் இந்த சர்ச்சையால் இரு அணி வீரர்களும் கை கொடுக்காமல் சென்றது மற்றொரு சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் வங்கதேசம் இப்படி ஒரு மோசமான வேலையை செய்யுமென எதிர்பார்க்கவில்லை என்று தெரிவிக்கும் மேத்தியூஸ், ஷாகிப் மீதிருந்த மரியாதை போய்விட்டதாக விமர்சித்துள்ளார். மேலும் 2 நிமிடத்திற்கு 5 நொடிகள் முன்பாகவே களத்திற்கு தாம் வந்த வீடியோ ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் எதையும் தவறாக செய்யவில்லை. எனக்கு 2 நிமிடங்கள் இருந்தும் ஹெல்மெட் பழுதாகி விட்டது. இந்த விஷயத்தில் பொது அறிவு எங்கே இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இது சாகிப் மற்றும் வங்கதேசத்திடருந்து அவமானமான செயலாகும். அவர்கள் கிரிக்கெட்டை இவ்வாறு விளையாட விரும்பினால் அது மிகவும் தவறாகும். ஒருவேளை 2 நிமிடங்கள் நான் தாமதமாக வந்ததாக விதிமுறை சொன்னால் எனக்கு இன்னும் 5 வினாடிகள் இருந்தது.
இது மன்கட் என்று நான் சொல்லவில்லை. மாறாக முற்றிலும் அவமானமானது. இதுநாள் வரை சாகிப் மற்றும் வங்கதேசம் மீது எனக்கு மரியாதை இருந்தது. நாம் அனைவருமே விதிமுறைக்குட்பட்டு வெற்றிக்காக விளையாடுகிறோம். ஆனால் 2 நிமிடத்திற்குள் நான் வந்த வீடியோ ஆதாரம் இருக்கிறது. இதை நாங்கள் அறிக்கையாக பின்னர் கொண்டு வருவோம். மேலும் அவர்கள் மரியாதை கொடுக்கவில்லையெனில் நீங்களும் எங்களிடம் மரியாதையை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now